உக்ரைன் - ரஷ்யா நெருக்கடி! இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான நெருக்கடி காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால், அதனை எதிர்கொள்ள இலங்கை தற்போதே தயாராக வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரஷ்ய படையினர் நேற்றிரவு உக்ரைனுக்கு பிரவேசித்த பின்னர் உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 115 டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே எமக்கு செலுத்த முடியாதுள்ளது. முதலில் இரண்டு கப்பல்களுக்கு செலுத்துவது நல்லது. மூன்று கப்பல்களில் வந்துள்ள எரிபொருள் நாம் பழைய விலைக்கு கொள்வனவு செய்தது. பணத்தை செலுத்தி அதனை இறக்குங்கள். பின்னர் இறக்குமதி செய்யும் போது விலைகளில் மாற்றம் ஏற்படலாம்.
ரஷ்யாவின் ரூபிள், அமெரிக்க டொலரையும் பிரிட்டிஷ் பவுண் மற்றும் யூரோவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நாணயங்களுக்கு இடையில் இருக்கும் சம நிலை மாறும்.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயுவான எல்.என்.ஜீயை பெற்றுக்கொள்ளவில்லை என்றால், கத்தார் நாட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு எல்.என்.ஜீ அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இங்கு எல்.என்.ஜீ குறைந்து போகும்.
எல்.என்.ஜீ விலையும் அதிகரிக்கும். எமது பொருளாதாரத்திற்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாளைய தினம் எதிர்க்கட்சியினரின் விவாததிற்கு முன்னர் நிதியமைச்சர் இது தொடர்பில் உரை ஒன்றை நிகழ்த்தினால் நல்லது எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri