உக்ரைனின் அதிரடி நடவடிக்கை - ரஷ்யாவிடம் இருந்து பறிபோன இடம்
ரஷ்யாவின் கோட்டையான லைமனுக்கு அருகில் உள்ள கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை உக்ரைன் துருப்புக்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
இந்த மாதம் கார்கிவ் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பின்னர், லைமன் பகுதி போர் மையமாக காணப்பட்டது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் லைமனுக்கு வடமேற்கே ஆறு மைல் தொலைவில் உள்ள ட்ரோபிஷேவில் இருக்கும் உக்ரேனிய துருப்புக்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
லைமனில் ரஷ்ய துருப்புக்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கையுடன், உக்ரைன் அப்பகுதியில் மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபோரிஜியா தாக்குதலில் 30 பேர் பலி
இதேவேளை, சபோரிஜியா தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை சபோரிஜியா நகரில் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சபோரிஜியா பிராந்திய ஆளுநர் ஸ்டாருக் தெரிவித்துள்ளார்.
வேண்டுமென்றே கொலையுடன் எதிரிகள் இந்த நாளைத் தொடங்கியுள்ளனர். ரஷ்ய இராணுவத்திற்கு அவர்களின் ஏவுகணைகள் எங்கு தாக்கும் என்று தெரியும்" என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.