ரஷ்யாவின் தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தில் தீப்பரவல்! - உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்(video)
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமாக கருதப்படும் உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலுக்குப் பின்னர் இன்று அதிகாலை தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகளுக்கும் ரஷ்ய துருப்புக்களுக்கும் இடையே கடுமையான சண்டை இடம்பெற்று வருவதாகவும் விவரங்கள் தெரியாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்ய துருப்புக்கள் ஆலையைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டதாகவும், இராணுவ டாங்கிகளுடன் நகரத்திற்குள் நுழைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
"ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் கட்டிடங்கள் மற்றும் அலகுகளின் தொடர்ச்சியான தாக்குதலின் விளைவாக, ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் தீப்பிடித்துள்ளது. இது உலகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு மில்லியன் அகதிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி வெளியேறியுள்ளனர்.
ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளில் பரந்த மோதலின் அச்சம் ஆகியவற்றை உருவாக்கி, ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக உக்ரைனின் தலைநகரான கியேவில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள செயலிழந்த செர்னோபில் ஆலையை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.