அதிரடியாக வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான கோப்புகள் - அமெரிக்கா எதிர்பார்த்திருந்த அந்நாள்..!
அமெரிக்காவின், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான விசாரணைகள் தொடர்பான கோப்புகளின் ஒரு பகுதியை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு நீண்ட காலமாக சிக்கல்களை ஏற்படுத்தி வந்த குறித்த வழக்கு தொடர்பான கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளமை அமெரிக்காவில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாடு, நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த குறித்த வழக்கு கோப்புகளே தற்போது அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.
பரபரப்பு தகவல்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர், பல பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவருடன் ஜனாதிபதி ட்ரம்புக்கு தொடர்பு இருப்பதாக தொடர் சர்ச்சை கிளம்பி வந்தது.

இந்நிலையிலேயே எப்ஸ்டீன் பற்றிய விசாரணை கோப்புகள் வெளியாகியுள்ளதுடன் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவை தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தின் பிரத்யேக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த கோப்புகள் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த கோப்புகளில் உள்ள தரவுகளின் படி, அமெரிக்க ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டு நீக்கப்படுமா அல்லது சிக்கல்கள் அதிகரிக்குமா என சர்வதேசமே எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan