பெருமளவிலான ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டோம்! - சேத விபரங்களை வெளியிட்டுள்ள உக்ரைன்
உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, நேற்று அதிகாலையில் உக்ரைன் மீது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி போரை தொடங்கியிருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்ற மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் சார்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகொப்டர்கள் மற்றும் 30 க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 2 ஆவது நாளாக போர் தொடுத்து வந்த நிலையில், தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைன் சார்பில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகொப்டர்கள் மற்றும் 30 க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டுதகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சிகளில் சீனா, ரஷ்யாவை ஆதரிப்பதாக, சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படைகள்! கொல்லப்பட்ட பெருமளவான மக்கள்
போலாந்தை பிடிக்க தயாராகும் புட்டின்:செய்மதி படங்கள் கிடைத்துள்ளன என்கிறது அமெரிக்கா