ரஷ்யாவுக்கு சாதகமாக ஜெலென்ஸ்கி எடுத்த அதிரடி தீர்மானம் .. போரில் புதிய திருப்பம்!
மேற்கத்தேயய பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிமொழியாக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெர்லினில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை இதைப் பதிவு செய்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகவும் கொடூரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில், சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
நேட்டோவுடன் இணைதல்
அந்தவகையில், டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் சந்திப்புகளை முன்னெடுப்பதற்காக ஜேர்மன் தலைநகருக்கு விமானத்தில் பயணித்தபோது ஜெலென்ஸ்கி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

நேட்டோ விவகாரம் ரஷ்யாவின் போர் நோக்கங்களில் ஒன்றையும் பூர்த்தி செய்கிறது, இருப்பினும் உக்ரைன் இதுவரை ரஷ்யாவிற்கு தங்கள் பிரதேசத்தை விட்டுக்கொடுப்பதற்கு எதிராக உறுதியாகவே உள்ளது.
ஜெலென்ஸ்கி மட்டுமின்றி, மற்ற ஐரோப்பிய தலைவர்களும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்காக ஜேர்மனிக்கு வர உள்ளதாக தெிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, நேட்டோ உறுப்பினர் பதவிக்கு பதிலாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நட்பு நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைனின் தரப்பில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.