ரஷ்ய போர்க்கப்பலை தகர்த்த உக்ரைன் விமானப்படை
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய தாக்குதல் இன்றுவரை தொடரும் நிலையில் ரஷ்ய போர்க்கப்பலை உக்ரேனிய விமானப்படை அழித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
போர்க் கப்பல்
மேலும் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, உக்ரைனின் விமானப்படை தளபதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
“டிசம்பர் 26 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.47 மணிக்கு உக்ரைனிய விமானிகள் ரஷ்ய கடற்படையின் நோவோசெர்காஸ்க் என்ற பெரிய போர்க் கப்பலை அழித்துள்ளனர். ரஷ்யாவின் கடற்படை சிறியதாகி வருகிறது. விமானப்படை விமானிகளுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |