புடினுக்கு வைக்கப்பட்ட குறி.. ஏவப்பட்ட ஆளில்லா விமானம் - உக்ரைன் வெளியிட்ட தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லங்களில் ஒன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறுத்துள்ளார்.
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்ய மாஸ்கோ முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அது மாத்திரமன்றி, இனிவரும் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புடின் எங்கிருந்தார்..
ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள புடினின் அரச இல்லத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு 91 நீண்ட தூர ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAV) பயன்படுத்தி கெய்வ் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.

அத்துடன், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை இப்போது மறுபரிசீலனை செய்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதேவேளை, தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் புடின் எங்கிருந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தொடர கிரெம்ளினுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கும் நோக்கில் முன்வைக்கப்படும் இது ஒரு வழக்கமான ரஷ்ய பொய் என்று ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam