ரஷ்யாவுக்காக போரிட்ட இலங்கையின் வாடகைப்படையினரை கைது செய்த உக்ரைன்
உக்ரைனின் - டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவுக்காக போரிட்ட நிலையில், உக்ரேனிய ஆயுதப்படைகளால், இலங்கையின் வாடகைப்படையினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் துருப்புக்களின் செயல்பாட்டு மற்றும் மூலோபாய குழுவின் பேச்சாளர் லெப்டினன்ட் கேர்னல் நாசர் வோலோஷினை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பான மேலதிக தகவல்களை சர்வதேச தரப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து
ரஷ்ய இராணுவம்
ரஷ்ய இராணுவம் போர்க்களத்தில் கணிசமான இழப்புகளால் உக்ரைனுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான வெற்றிட சவாலை எதிர்கொள்கிறது.
இதனால், கிரெம்ளின் தனது ஆக்கிரமிப்புப் படைகளை வலுப்படுத்த ஏனைய நாடுகளில் இருந்து கூலிப்படையினரை ஆட்சேர்ப்பு செய்கிறது என்றும் உக்ரைனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
you may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |