உக்ரைன் களமுனைக்கு அனுப்பப்படும் பயங்கர ஆயுதங்கள்(Video)
புதிதாக படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனிய வீரர்கள் கடுமையான பயிற்சிகளை செய்துகொண்டு வருகின்றனர்.
உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை செய்துகொண்டிருக்கின்ற ரஷ்ய படையினர் மீது எப்படி அதிரடி தாக்குதலை மேற்கொள்ளலாம். அவர்களை எப்படி சுற்றி வளைப்பது? எப்படி அவர்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்துவது மற்றும் ரஷ்ய படையினர் பயணிக்கும் கவச வாகனங்களை எவ்வாறு தாக்குவது என்பது தொடர்பில் பயிற்சி எடுக்கின்றனர்.
ஆனால் இந்த பயிற்சிகள் உக்ரைனில் நடைபெறவில்லை மாறாக பிரித்தானிய மண்ணில் தான் நடைபெறுகின்றது.
இதேபோன்று பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகளும் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சியை வழங்குகின்றன.
இதேவேளை சில நாடுகளிடமிருந்து உக்ரைனிய வீரர்களுக்கு பயங்கர ஆயுதங்களும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் அண்மையில் உக்ரைன் களமுனைக்கு அனுப்பப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பற்றிய முழு விபரங்களை இந்த காணொளியில் காணலாம்,