ரஷ்யாவை அழிக்க பாரிய திட்டம்! போர் கொதி நிலையில் ஐரோப்பா (VIDEO)
உக்ரைன் - ரஷ்ய போரில் ரஷ்யாவை அழிக்க பாரிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
உக்ரைன் - ரஷ்ய போர் 343 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் போரில் ரஷ்யாவை வீழ்த்திவிடலாம் என்பதே உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் மேற்குலக நாடுகளின் திட்டமாகவுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஆசிய நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகள் தடையாகவுள்ளதுடன், ரஷ்யா தன் மீதான பொருளாதார தடைகளை எதிர்த்து போராட ஆசிய நாடுகள் உதவியாகவுள்ளது.
இருப்பினும், உக்ரைனுக்கு உதவும் வகையில் உக்ரைன் - ரஷ்ய போரில் மெதுவாக நேட்டோ நுழைந்துள்ளதுடன், இந்த போர் நேட்டோவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போராக மாற்றமடையும் நிலை உருவாகியுள்ளது.
எனவே ரஷ்யா தனது உள் பகுதியில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களை கூட தன் மீதான தாக்குதலாகவே கருதும் என்றும், ரஷ்யா அதற்கான முழு திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளதுடன், பாரிய படைதளங்களையும் தயார் செய்துள்ளது.
எனவே போரை உக்ரைனால் சமாளிக்க முடியாத பட்சத்தில் நேட்டோ நேரடியாக போரில் களமிறங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.