ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் - ஆயிரக்கணக்கான துருப்புக்களை உக்ரைனில் நிறுத்த திட்டம்
ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைனில் துருப்புக்களை நிலை நிறுத்துவதற்கான நோக்கத்துடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
உக்ரைனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் "உக்ரைன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும் என்று அவர் கூறியுள்ளார் .
போர் நிறுத்த கண்காணிப்பு
அதே நேரத்தில் பின்னர் ஆயிரக்கணக்கான துருப்புக்கள், உக்ரைனில் நிறுத்தப்படலாம் என்றும் பிரான்சின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நட்பு நாடுகள் உக்ரைனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெருமளவில் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் ஒரு போர் நிறுத்தத்தை கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளன.
எனினும் உக்ரைனில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு துருப்புக்களும் சட்டபூர்வமான இலக்காக" இருக்கும் என்று ரஷ்யா பலமுறை எச்சரித்து வருகின்ற நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு
இதேவேளை,பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2022 இல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார், இந்த நிலையில், தற்போது உக்ரைனின் சுமார் 20% பிரதேசம் மொஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri