உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரின் சொத்துக்களை ஏலம் விட ரஷ்யா முடிவு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உட்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அவற்றில் கிரீமியா தன்னாட்சிக் குடியரசிலுள்ள 100 சொத்துக்களை விற்க திட்டமிட்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கிரீமியாவிலுள்ள, தேசிய மயமாக்கப்பட்டுள்ள சொத்துக்களை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக கிரிமியாவின் நாடாளுமன்ற சபாநாயகரான Vladimir Konstantinov தெரிவித்துள்ளார்.
தீபகற்பத்தை கைப்பற்றியுள்ள ரஷ்ய படைகள்
2014 ஆம் ஆண்டு ரஷ்ய படைகள் கிரீமியா தீபகற்பத்தை கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்ய அதிகாரிகள் அங்கு தேர்தல் நடத்தி அரசை நிர்வகித்து வருகின்றனர்.
உக்ரைன் நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமான 500 சொத்துக்களை தேசியமயமாக்கிய ரஷ்ய அதிகாரிகள், 815 மில்லியன் ரூபிள் மதிப்பிலான சொத்துக்களை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
