பிரித்தானியாவை நெருங்கிய ரஷ்ய ஜெட் விமானம்! நடுவானில் துரத்தியடித்த ராயல் விமானப்படை
பிரித்தானியாவை நெருங்கி வந்த ரஷ்ய ஜெட் விமானத்தை ராயல் விமானப்படை (RAF) விமானங்கள் இடைமறித்து துரத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (30.04.2023 ) வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் நோர்வே கடல் பரப்பில் இருந்து ரஷ்யாவின் கடல்சார் ரோந்து ஜெட் விமானம் Tu-142 பிரித்தானியாவை நோக்கி நெருங்கி வந்துள்ளது.
இந்நிலையில் ஸ்காட்லாந்தின் வடக்கே உள்ள லாசிமவுத்தில் இருந்து ராயல் விமானப்படையின்(RAF) டைபூன்(Typhoons) ரக ஜெட் விமானங்கள் ரஷ்ய ஜெட் விமானங்களை இடைமறிக்க அனுப்பப்பட்டு ஜெட் விமானங்கள் துரத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ரஷ்ய ஜெட் விமானங்கள் பிரித்தானிய வான்வெளிக்குள் நுழையவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.