ரஷ்ய ஆக்கிரமிப்பு கெர்சன் நகரிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்களுக்கு உத்தரவு
ரஷ்ய- கெர்சன் நகரின் மீது உக்ரைன் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது.
சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் இராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஷ்ய அதிபர் புதின் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தி உள்ளார்.

பொதுமக்களுக்கு உத்தரவு
இந்த நிலையில் ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற ரஷ்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கெர்சன் நகரின் மீது உக்ரைன் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே கெர்சன் நகர மக்கள் நெய்பர் ஆற்றின் வழியாக படகுகள் மூலம் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ எல்லைக்குள் வந்து சேர வேண்டும் என ரஷ்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் கெர்சன் நகர மக்கள் ரஷ்ய அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்கக் கூடாது என்றும், ரஷ்யா அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam