அராஜகத்தின் புதிய ஆயுதக்களஞ்சியமாக மாறும் உக்ரைன் - வெளியான அதிர்ச்சி அறிக்கை
உக்ரைனுக்கும் - ரஷ்யாவிற்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் போர்க்களங்கள் அராஜகத்தின் புதிய ஆயுதக்களஞ்சியமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய முன்முயற்சி அறிக்கை வெளியான நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கும் - ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறைவுப்பெற்ற பின்னர் அங்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்கு என்ன நடக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான அதிர்ச்சி அறிக்கை
குறித்து அறிக்கையில், தற்போதைய போர் முடிவடையும்போது உக்ரைனின் போர்க்களங்கள் அராஜகத்தின் புதிய ஆயுதக் களஞ்சியமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் முதல் ஐரோப்பாவில் உள்ள குண்டர்கள் வரை அனைவரையும் ஆயுதபாணியாக்கும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் முதல் இரண்டு நாட்களில் மட்டும் 25 ஆயிரம் தானியங்கி துப்பாக்கிகள், 10 மில்லியன் தோட்டாக்கள், மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலான ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள், ஏவுகணைகள் என்பன பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக உக்ரைனின் மறைந்த உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.