ரஷ்ய - உக்ரைன் போர் முனை: பயங்கரமான அனுபவங்களை வெளிப்படுத்திய இலங்கையர்கள்
ரஷ்ய - உக்ரைன் போர் முனைகளுக்கு சட்டவிரோதமாகச் சென்று, பலத்த காயமடைந்து மீண்டும் இந்த நாட்டிற்கு தப்பிச்சென்ற பல ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தங்களின் பயங்கரமான மற்றும் விரும்பத்தகாத அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிக சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்று தருவதாக கூறி நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதிலும் எதனையும் முறையாக பெற்றுக்கொடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொமாண்டோ படைப்பிரிவில் 22 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்று, அந்நாட்டு கூலிப்படையில் ரஷ்யா சென்று இணைந்து இலங்கை திரும்பிய மொனராகலை – தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த லலித் சாந்த, தனது அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அனுபவங்களை வெளிப்படுத்திய இலங்கையர்கள்
“சுமார் 16 பேர் வெவ்வேறு இடங்களில் முன்வரிசையில் அவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். மோட்டார் தாக்குதல் நடந்தது, தோள்பட்டை, முழங்கால், உள்ளங்கால் என பல இடங்களில் அடிபட்டு, சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காலை இழுத்துச்சென்றேன். ஒரு தொழில்நுட்ப போர் நடக்கிறது. அதை சமாளிப்பது கடினம். அவர்கள் கூடாரத்தில் வாழ்வது மிகவும் கடினம்.
அத்துடன் தெனிப்பிட்டிய, வெலிகம பகுதியைச் சேர்ந்த சந்தன பண்டார என்பவர் ரஷ்ய போர் முனையில் காயமடைந்து பல இன்னல்களுக்குப் பின்னர் மீண்டும் இந்நாட்டிற்கு வந்துள்ளார்.
“போருக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியதால் பயிற்சிப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அந்தப் பள்ளியில் சுமார் 150 முதல் 200 வரையிலான இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். போதிய ஆயுதங்களைக் கொடுத்தார்கள். ஆனால் எங்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan
