ரஷ்யாவிலிருந்து ஜெர்மன் தூதர்கள் அதிரடியாக வெளியேற்றம்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவிலிருந்து 20 ஜெர்மன் தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பெர்லினில் இருந்து தனது தூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கான எதிர்வினையே ஜெர்மன் தூதர்களின் வெளியேற்றம் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
நாட்டில் ஜேர்மன் தூதரக பணிகளின் அதிகபட்ச ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தேவை பூர்த்தி
எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவை ஜெர்மனி சார்ந்திருந்த நிலையில், உக்ரைன் போர் சூழலில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டுள்ளன.
இந்த கூட்டணியில் ஜெர்மனியும் கைகோர்த்து கொண்டதுடன் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்க கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அதில் ஜெர்மனியும் கலந்து கொண்டுள்ளது.
ஜெர்மனியின் இந்த செயற்பாடு ரஷ்யாவின் கவனத்திற்கு சென்ற நிலையில், ஜெர்மனியிலிருந்து ரஷ்ய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
