கருங்கடல் மீது வட்டமிட்ட அமெரிக்க ட்ரோன்! திடீரென இடைமறித்த ரஷ்யாவினால் குழப்பம்
கருங்கடல் மீது அமெரிக்க ட்ரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்ட இதனை தெரிவித்துள்ளது.
எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்குதல்
கருங்கடல் மீது அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்துவதற்காகவும் ரஷ்ய விமானப்படை தனது SU 30 போர் ஜெட் விமானத்தை தயார் நிலையில் வைத்துள்ளது.
இதையடுத்து எல்லையருகே வட்டமிட்ட அமெரிக்க ட்ரோன் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனின் வெடிபொருள் நிரம்பிய ஒரு ட்ரோன் ரஷ்யாவின் கிரீமியா பாலத்தின் அருகே சென்றுக்கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்கியதாகவும் உக்ரைன் ரஷ்யா இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.