உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் திடீர் மாற்றம்! குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள்
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் திடீர் மாற்றத்தை மேற்கொள்ள அதிபர் ஜெலன்ஸ்கி முடிவு செய்துள்ளார்.
இம்மாத இறுதியில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம்’’ என்று உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோ பதிலளித்திருந்தார்.
இந்நிலையில்,பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோவை வேறு துறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் முறைகேடு
இவருக்கு பதிலாக இராணுவ புலனாய்வுத் தலைவர் கைரிலோ புடானோவ், பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ளதாக உக்ரைனில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டில் இராணுவத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக, ஆவணங்களில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆதாரங்களை, இராணுவ தணிக்கைக் குழுவினர் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்தே ஒலெக்சில் ரெஸ்னிகோ, பாதுகாப்புத் துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் அமைச்சரவையில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என்றும், தொழில் துறையின் அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.