பிரித்தானியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் ஓட்டுநர்கள் அறிவிப்பு
ஊதியம் தொடர்பான சர்ச்சை காரணமாக பிரித்தானியாவில் ஒன்பது ரயில் நிறுவனங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்கள் எதிர்வரும் 13ம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக Aslef (Associated Society of Locomotive Engineers and Firemen) அறிவித்துள்ளது.
ஏழு நிறுவனங்களில் உள்ள Aslef உறுப்பினர்கள் ஏற்கனவே ஜூலை 30ம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மேலும் இரண்டு நிறுவனங்களின் ஓட்டுநர்கள் இப்போது தொழில்துறை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தம் என்பது கடைசி முயற்சி என்று தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் உண்மையான ஊதியக் குறைப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு ரயில் வேலை நிறுத்தம் காரணமாக இன்றைய தினம் பயணிகள்இடையூறுகளை எதிர்கொண்டனர்.
Network Rail மற்றும் 14 ஏனைய இரயில் நிறுவனங்களில் உள்ள சுமார் 40,000 தொழிற்சங்க உறுப்பினர்கள் ஊதியம், பணி நீக்கம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றங்கள் காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிளாக்பூல், போர்ட்ஸ்மவுத் மற்றும் போர்ன்மவுத் உள்ளிட்ட சில இடங்களில் ரயில்கள் எதுவும் இல்லாத நிலையில், ஐந்தில் ஒரு சேவை மட்டுமே இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஏன் வேலை நிறுத்தம்?
RMT (National Union of Rail, Maritime and Transport Workers) உறுப்பினர்கள் வேலைகள், ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வேலை நிலைமைகள் பற்றிய முரண்பாடு காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Network Rail ஆண்டு முழுவதும் 4 வீத ஊதிய உயர்வை வழங்கியது, மேலும் தொழிலாளர்கள் வேலை நிலைமைகளில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் அடுத்த ஆண்டு 4 வீத ஊதிய உயர்வை வழங்க முடியும். எனினும், இது தொழிற்சங்க முதலாளிகளால் நிராகரிக்கப்பட்டது.
மாறாக, RMT குறைந்தபட்சம் 7 வீத ஊதிய உயர்வுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அதிகரிப்பானது தற்போதைய பணவீக்க விகிதமான 9.4 வீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மேலும் சலுகைகள் வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், RMT முதலாளிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகைகளையும் ஏற்க மறுப்பதாக Network Rail தெரிவித்துள்ளது.
நாங்கள் சில சலுகைகளை வழங்கியுள்ளோம், ஆனால் அவை எதுவும் தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை, இது மிகவும் நியாயமற்றது" என்று Network Rail தலைவர் சர் பீட்டர் ஹெண்டி தெரிவித்தார்.
நாங்கள் ரயில்வேயை நவீனப்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் ஒவ்வொரு பகுதியும் அனைவருக்கும் வரவேற்பு இருக்காது, ஆனால் எங்களுக்கு கட்டாய பணிநீக்கம் தேவையில்லை என்று தொழிற்சங்கம் கூறினால், அதை வழங்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியில் Network Rail 2,500 பராமரிப்பு வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக RMT தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 2,000 க்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் இருக்காது எனவும் அனைத்து பணிநீக்கங்களும் தன்னார்வமாக இருக்கும் என்று Network Rail கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.