பிரித்தானியாவின் பல பகுதிகளில் ஒன்ராறியோ அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டம்
ஸ்கார்பரோ போன்ற அதிக தேவை உள்ள பகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் 130இற்கும் மேற்பட்ட புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட குழுக்களுக்கு உதவுவதன் மூலம் 300,000 பேரை முதன்மை பராமரிப்புடன் இணைக்க ஒன்ராறியோ அரசாங்கம் 235 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்த முதலீடு, அதிகமான குடியிருப்பாளர்கள் ஒரு குடும்ப மருத்துவர் அல்லது செவிலியர் பயிற்சியாளரைப் பெற்றுக்கொள்ளும் வசதியை உறுதி செய்கிறது.
அத்துடன், காத்திருப்பு நேரங்களையும் அவசர மருத்துவ அறைகளின் நெருக்கடியையும் குறைக்கும் வகையிலும் இது திட்டமிடப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!
முக்கிய திட்டம்
ஸ்கார்பரோ பொதுமருத்துவமனையில் நோயினைக் கண்டறியும் புதிய துறை மற்றும் ஸ்கார்பரோ மருத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அகடமியில் (SAMIH) கட்டப்பட்டு வரும் முதல் மருத்துவப் பாடசாலை போன்ற திட்டங்கள் மூலம் ஸ்கார்பரோ பெரிய சுகாதார மேம்பாடுகளையும் காண்கிறது.

“எங்கள் அரசாங்கம் மக்களை சிறந்த பராமரிப்பில் வைத்திருகின்றது. ஸ்கார்பரோ குடும்பங்களுக்கு சிறப்பான மருத்துவர் வசதியை ஏற்படுத்தி, விரைவான நோயைக் கண்டறிதல்கள் மற்றும் வீட்டிற்கு அருகில் உயர்தர சேவைகள் இருப்பதை உறுதி செய்கிறது.
ஸ்கார்பரோ குடியிருப்பாளர்களுக்கு தகுதியான சுகாதார சேவையை நாங்கள் வழங்குகிறோம்” என்று அமைச்சர் விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.
இந்த முதலீடுகள் சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும் மாநிலம் முழுவதும் வளர்ந்து வரும் சமூகங்களை ஆதரிப்பதற்கும் ஒன்ராறியோவின் துணிச்சலான திட்டத்தின் ஒரு பகுதி என கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam