கிரேக்க தீவு ஒன்றில் காணாமல் போன இங்கிலாந்தின் முன்னணி ஒளிபரப்பாளர்
இங்கிலாந்தின் (England) முன்னணி ஒளிபரப்பாளர் மைக்கேல் மோஸ்லி (Michael Mosley) கிரேக்க தீவான சிமியில் கடற்கரையோர நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், காணாமல் போனதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், அஜியோஸ் நிகோலாஸ் கடற்கரைக்கு இடையே உள்ள பேடி கிராமத்திற்கு ஒரு பாதையில் ஒரு குறுகிய நடைப்பயணத்தை மேற்கொண்ட பின்னரே காணாமல் போயுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவரது மனைவி இன்று (07.06.2024) முறையிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிமி தீவு
இந்நிலையில், கிழக்கு ஏஜியன் கடலில் உள்ள இந்த சிறிய தீவில் கடலோரப் பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினரால் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
67 வயதான மோஸ்லி, பிபிசி தொடரான டிரஸ்ட் மீ, ஐஎம் டொக்டர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக இங்கிலாந்தில் நன்கு அறியப்பட்ட ஒரு ஒளிபரப்பாளர் ஆவார்.
சிமி என்பது 2,500 குடியிருப்பாளர்கள் வசிக்கும் சுமார் 10 மைல் நீளமுள்ள ஒரு குறைந்த மக்கள்தொகை கொண்ட பாறை தீவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |