ஒரு இலட்சம் வீடுகளை வழங்கிய பிரித்தானியர்களின் மனிதாபிமான செயல்! - போரிஸ் ஜோன்சன் பெருமிதம்
100,000க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் உக்ரைன் அகதிகளுக்கு தங்கள் வீடுகளை வழங்கியுள்ளனர் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டை "அற்புதம்" என்று கூறிய பிரதமர், இதுவரை தங்கள் உதவியை வழங்க முன்வந்துள்ள அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
ரஷ்யாவுடனான போரில் இருந்து தப்பிய உக்ரேனியர்களுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு வீடு வழங்குவதற்கு மக்கள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்யக்கூடிய இணையதளம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது.
உக்ரைனுக்கான வீடுகள் திட்டம் திங்கள்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சரவை அமைச்சர் மைக்கேல் கோவ் அறிவித்தார், மேலும் பிரித்தானியாவிற்கு வரக்கூடிய உக்ரேனிய அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்றும் கூறினார்.
It’s fantastic that over 100,000 people and organisations have recorded their interest in supporting Ukrainians fleeing the war through the Homes for Ukraine scheme.
— Boris Johnson (@BorisJohnson) March 15, 2022
Thank you to everyone across the country who has stepped up to offer their help so far. #StandWithUkraine https://t.co/cZWCHyLoZT
இணையதளம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்துக்குள் 1,500 பேர் தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். தங்கள் வீடுகளை அகதிகளுக்குத் வழங்குவதற்காக மாதத்திற்கு £350 வரி விலக்கு பெறுவார்கள்.
உக்ரேனிய நாட்டவர் அல்லது உக்ரேனிய நாட்டவரின் உடனடி குடும்ப உறுப்பினர், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் உக்ரைனில் வசித்திருந்தால், இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர். அவர்கள் பிரித்தானியாவில் குடும்ப உறவுகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
திட்டம் எப்படி செயல்படும்?
பிரித்தானியாவில் உதிரி அறை அல்லது ஆளில்லாத தனித்தனி தங்குமிடம் உள்ளவர்கள், உக்ரேனியர்களை குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு தங்க வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உடனடி நடவடிக்கையாக, அத்தகைய சலுகையை வழங்க விரும்புவோர் புதிய "Homes for Ukraine" இணையதளத்தில் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நபர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். பெயரிடப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ள தங்குமிடத்தை வழங்குபவர்களுக்கு தொண்டு நிறுவனங்களும் பிற நிறுவனங்களும் உதவலாம்.
அகதிகளை தங்கவைக்க முன்வந்த தனிநபர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்படும். உள்ளூராட்சி மன்றங்கள் வழங்கப்படும் தங்குமிடம் பொருத்தமானதா என்பதைச் சரிபார்க்கலாம். ஸ்பான்சர்கள் எந்தவொரு குடிவரவு அந்தஸ்தையும் கொண்ட எந்த நாட்டினராகவும் இருக்கலாம்.
உக்ரேனியர்கள் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு நிதி உதவி
பிரித்தானியாவில் பரந்த ஆதரவை வழங்குவதற்காக ஒரு தனிப்பட்ட அகதிக்கு உள்ளூர் சபைகளுக்கு £10,000 வழங்கப்படும். குழந்தைகள் பாடசாலைகளுக்குச் செல்ல கூடுதல் நிதி வழங்கப்படும்.
உக்ரைன் அகதிகள் அனைத்து NHS சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இத்திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து வருபவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அத்துடன், வேலை தேடலாம். மூன்று வருடங்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கு அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படும்