பிரித்தானிய போர் விமானங்களும் களத்தில்.. உடன் நிறுத்த வேண்டும்! ஸ்டார்மரின் அதிரடி அறிவிப்பு
நாட்டின் நலன் மற்றும் நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த தற்காப்பு முயற்சிகளில் பங்கேற்க மத்திய கிழக்கில் பிரித்தானிய போர் விமானங்கள் வானத்தில் களமிறங்கி இருப்பதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் பிரித்தானியா "எந்தப் பங்கையும் வகிக்கவில்லை".
ஆனால் தனது நாட்டின் படைகள் இப்பகுதியில் தீவிரமாக உள்ளன. நமது மக்கள், நமது நலன்கள் மற்றும் நமது நட்பு நாடுகளைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த பிராந்திய தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய விமானங்கள் இன்று வானத்தில் உள்ளன.
ஈரானுக்கு அழைப்பு
மத்திய கிழக்கு முழுவதும் மேலும் தாக்குதல்களைத் தவிர்க்கவும், அதன் ஆயுதத் திட்டத்தைக் கைவிடவும், "ஈரானிய மக்களுக்கு எதிரான பயங்கரமான வன்முறை மற்றும் அடக்குமுறையை" நிறுத்தவும் ஈரான் முன்வர வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மீதான ஈரானிய தாக்குதல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஈரான் கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஈரானியத் தலைமையை நாங்கள் வலியுறுத்துகிறோம். இறுதியில், ஈரானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு காணாத தாக்குதல்கள்! மத்திய கிழக்கு முழுவதும் அதிரடி காட்டும் ஈரான் - முக்கிய விமான நிலையம் குறிவைப்பு
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam