அகதி தஞ்சக்கோரிக்கையாளரிற்கு சார்பாக பிரித்தானிய உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு ஒரு வழி பயணமாக அனுப்புவதற்கான அந்நாட்டு அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவ்வாறு அனுப்பப்படும் புலம்பெயர்ந்தோர் ருவாண்டாவில் இருக்கும் போது அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் புலம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பு தொடர்பில் விசாரணை செய்தபோதே நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கையர்கள் தொடர்பிலான நிலைப்பாடு
குறிப்பாக இலங்கையர்களும் ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையர்கள் தொடர்பிலான நிலைப்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் பரிசீலிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக வழக்கினை தாக்கல் செய்த சட்டத்தரணிகள் குழாம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam