இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இதனால் பிரித்தானியா மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணியின் நான்கு நாள் கொண்டாட்டங்களின் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இங்கிலாந்து முழுவதும் பிக் ஜூபிலி மதிய உணவு மற்றும் தெரு விருந்துகளுக்கான கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
நாளை மோசமான வானிலை
இன்று பிற்பகல் வேளையில் தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளையும் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பரந்த பகுதிகளையும் மோசமான வானிலை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் வேளையில் கார்ன்வால், டெவோன், பிளைமவுத் மற்றும் டோர்பே ஆகிய முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிட்லாண்ட்ஸ், கிழக்கு ஆங்கிலியா மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிக ஆபத்தில் இருக்கும்.
சில இடங்களில் அடைமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலங்கட்டி மழை ஒரு சில இடங்களை பாதிக்கும்
சில இடங்களில் ஒரு மணி நேரத்தில் 15-20 மி.மீ மலை பெய்யக்கூடும். மேலும் ஆலங்கட்டி மழை ஒரு சில இடங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை முன்னறிவிப்பாளர்களின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை வடக்கு இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளுக்கு மெதுவாகப் பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்து, வேல்ஸ், மிட்லாண்ட்ஸ் மற்றும் கிழக்கு ஆங்கிலியாவின் சில பகுதிகளில் மேலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியா