லண்டனில் இரண்டு தமிழர்கள் செய்த அசத்தலான சாதனை - குவியும் பாராட்டுகள்
லண்டனில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தமிழர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி நடக்கிறது. அந்த போட்டி கடந்த மாதம் நடந்தது.
போட்டியில் இந்தியா சார்பில் 160 பேர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
லண்டனில் தொடங்கி ஸ்காட்லாந்து தலைநகரான இடின்பராக் வரை சென்று மீண்டும் லண்டனுக்கு திரும்பும் இப்போட்டியில் 1,540 கிலோ மீட்டர் தூரத்தை 128 மணிநேரத்திற்குள் கடக்கவேண்டும் என்பது விதியாகும்.

இப்போட்டியில் தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சைக்கிள் வீரர்கள் பிரமோத்குமார், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 125 மணிநேரத்தில் தூரத்தை கடந்து சாதனை படைத்தனர். இதையடுத்து இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் பங்கேற்று வாழ்த்தி பேசுகையில், சாதனை படைக்க வயது ஒரு தடை இல்லை.
70 வயதுள்ள நமது முதல்வர் சைக்கிளில் மாமல்லபுரம் வரை செல்கிறார்.
சைக்கிள் போட்டியில் பங்கேற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த 2 பேரையும் பாராட்டுகிறேன். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என பேசினார்.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri