இலங்கைக்கான புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள பிரித்தானியா
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கைக்கான புதிய பயண ஆலோசனையை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இதர பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் வழியாக செல்லும் விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பயணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை
இலங்கையில் தற்போது மருந்து, சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
#Srilanka The FCDO now advises against all but essential travel to Sri Lanka, due to the impact of the current economic crisis. More info: https://t.co/SpBzpbKYd0 pic.twitter.com/F7gkXxUCWn
— FCDO Travel Advice (@FCDOtravelGovUK) July 5, 2022
மேலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் மற்றும் வன்முறை அமைதியின்மை நிலவுவதுடன், இலங்கைக்கான பயணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.