பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்
இந்தியர்கள் பிரித்தானியா செல்வதற்கான இலவச விசா வாய்ப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, இதற்கான விண்ணப்பப்படிவத்தை இன்று(22) மதியம் 1.30 முதல் நாளை மறுதினம் (24) வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தகைமைகள்
இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 18- 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அத்தோடு,குறித்த நபர்களின் வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும், ஏதாவது ஒரு கற்கை நெறியில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த விசாவினை பெற்றுக் கொண்டால் லண்டனில் இரண்டு வருடங்கள் பணி புரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை https://www.gov.uk/india-young-professionals-scheme-visa/eligibility என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri