மோசமடையும் பிரித்தானியாவின் பொருளாதாரம்! பெருமளவு தங்கத்தை ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுவிஸ்(Video)
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மொத்த உற்பத்தியில் பின்னடைவை சந்தித்த நாடாக பிரித்தானியா தான் உள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ஜி 7 என்ற பொருளாதார கூட்டமைப்பு நாடுகளில் பிரித்தானியா மட்டும் தான் மொத்த உற்பத்தியில் பின்னோக்கி உள்ளது.
இந்த உலக பொருளாதார நெருக்கடியில் ஏனைய நாடுகளும் சிக்கி இருந்தாலும் அவர்களில் ஓரளவேனும் வளர்ச்சி வீதம் இருக்கின்றது. ஆனால் பிரித்தானியா அதற்கு எதிர்மறையான ஒரு நிலையை தான் அடைந்துள்ளது.
இந்த பின்னடைவு நாடு மக்களின் வாழ்க்கை தரத்தை பாதிப்பதை பிரித்தானியாவின் நிதி அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் 4.3 புள்ளி மக்களின் வாழ்க்கை தரம் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
