தீவிரமடையும் வேலைநிறுத்த போராட்டம்! ரிஷி சுனக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக தான் பின்வாங்கப் போவதில்லை என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸுக்கு முன்னதாக நெருக்கடியை தீர்க்குமாறு செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தீவிரமடையும் போராட்டம்
ஆனால் இருதரப்புக்கும் இடையே முன்னேற்றம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
”ஊதியத்தை அதிகரிப்பதை விட பரவலான இடையூறுகளை ஏற்றுக்கொள்வது மற்றும் பணவீக்கத்தைத் தூண்டும் அபாயத்தை தான் ஏற்றுக்கொள்வேன்” என்று பிரதமர் ரிஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளர் காவு வண்டி ஊழியர்கள், சுங்க மற்றும் குடிவரவு ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் அனைவரும் வேலையை விட்டு விலகுதல் மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய தொழில்துறை வேலைநிறுத்தங்களை பிரித்தானிய எதிர்கொள்கிறது எனவும் விமர்சிக்கப்படுகின்றது.
பிரித்தானிய அரசாங்கத்தரப்பு தகவல்
ஊதிய உயா்வு மற்றும் பணித் தர மேம்பாட்டை வலியுறுத்தி பிரித்தானிய பொது சுகாதாரத் துறை செவிலியா்கள் வரலாறு காணாத போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
பிரித்தானியாவின் பொது சுகாதார சேவை (என்ஹெச்எஸ்) துறையில் பணியாற்றி வரும் செவிலியருக்கு போதிய ஊதியம் அளிக்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது.
பல ஆண்டுகளாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவர்களது ஊதியம் உயர்த்தப்படாததால் தற்போது அவர்களது சம்பளம் மிக சொற்பமாக உள்ளது என்று பொது சுகாதாரத் துறை செவிலியர்களின் ராயல் செவிலியர் கல்லூரி (ஆா்சிஎன்) அமைப்பு கூறுகிறது.
செவிலியர் பணியை விட பல்பொருள் அங்காடியில் பணியாற்றும் பெண்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதால் பல செவிலியர்கள் தங்களது வேலையை இராஜிநாமா செய்துவிட்டு அங்கு பணியில் சேர்வதாகக் கூறப்படுகிறது.
இதனால் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல், மற்ற செவிலியர்களுக்கு வேலைப் பளு அதிகமாகிறது. இதனால் அவர்கள் கூடுதல் நேரம் அதிக பணியாற்றும் அவர்கள் உடல்ரீதியிலும் மன ரீதியிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்று தொழில் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
செவிலியர்களின் கோரிக்கை
இச் சிக்கலான நிலையை எதிர்கொள்வதற்காக பிரித்தானியாவில் ஆயுதப் படைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன - ஆனால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நோயாளர் காவுவண்டி சாரதிகளின் வேலைநிறுத்தம் காரணமாக சிக்கல் நிலை தீவிரமடைகிறது எனவும் மக்கள் "ஆபத்தான செயல்பாட்டை" தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
NHS கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் தொழிலாளர் ஆலோசகருமான மேத்யூ டெய்லர், வேலைநிறுத்தங்களின் போது மருத்துவமனை தலைவர்கள் "நோயாளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது" என்று எச்சரித்துள்ளார்.
எனினும், தற்போதைய பொருளாதார சூழலில் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று பிரித்தானிய அரசாங்க தரப்பினாலும் தொடர்ச்சியாக தெரிவிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.