பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பு : பாதுகாப்பு அமைச்சர் ஹீலி திடீர் பதவி விலகல்
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி நாட்டின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவி விலகியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பு
உலகளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்க பிரதமரும், நிதி அமைச்சகமும் முன்வரவில்லை என்று ஜோன் ஹீலி தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் இராணுவச் செலவினங்களை அதிகரிப்பது தொடர்பாக பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த இழுபறியால், நாட்டின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் கடந்த ஆண்டு முதல் தாமதமாகி வந்தது.
அமெரிக்கா ஐரோப்பாவிற்கான தனது பாதுகாப்பு ஆதரவைக் குறைத்து வரும் வேளையிலும், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலிலும், இந்த நிதி தாமதம் பிரித்தானிய பாதுகாப்புத் துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
நீண்ட கால பாதுகாப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முடியாத நிலை உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்து வந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சரின் இந்த திடீர் பதவி விலகல் பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.