பிரித்தானியாவில் தீவிரமடையும் வைரஸ் தொற்றினால் பலியாகும் சிறுவர்கள்! தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 30 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு மேலும் நான்கு சிறார்கள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு பலியாகியுள்ள 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் எண்ணிக்கை 30 என உறுதியாகியுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இந்நிலையில், தற்போது திடீரென்று Strep A பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனமாக பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெல்ஃபாஸ்ட் மற்றும் வேல்ஸ் பகுதியில் மூன்று சிறார்கள் மரணமடைந்துள்ளதை UKHSA அமைப்பு பதிவு செய்துள்ளது. மேலும், 4 வயதுக்கு உட்பட்ட 151 சிறார்கள் Strep A பாதிப்புக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2017 மற்றும் 2018 காலகட்டத்தில் 5 மற்றும் 9 வயதுடைய சிறார்கள் 102 பேர் பாதிப்புக்குள்ளாகி 122 பேர் மரணமடைந்துள்ளனர்.