பிரித்தானியாவில் தீவிரமடையும் கொடிய வைரஸ் தொற்று! குழப்பத்தில் மருத்துவ நிபுணர்கள்
பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 19 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில்,தற்போது பிரித்தானியாவில் அதிகளவிலானோருக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் சிறியளவிலான அறிகுறிகள் காணப்பட்ட சிறார்கள் திடீரென்று மரணமடைந்துள்ளமையினால் பாதிப்பு எண்ணிக்கை குழப்பமாக உள்ளதாக பிரித்தானியாவின் UKHSA அமைப்புக்கான ஆலோசகர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும், Strep A பாதிப்பு நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 111 பேர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், ஐந்தில் இருந்து 9 வயது வரையான சிறார்களில் 74 பேர்களுக்கு Strep A பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மிகவும் தீவிரமானதும் வழக்கத்துக்கு மாறான தொற்றாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நோய் அறிகுறிகள்
மேலும், 2 மற்றும் 3 வயதுடைய அனைத்து சிறார்களுக்கும் காய்ச்சல் தொடர்பில் மூக்குவழியான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 37.4% மட்டுமே 2 வயது சிறார்கள் மூக்குவழியான தடுப்பூசி மருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 3 வயது சிறார்கள் 39.5% பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு செல்லும் சிறார்களுக்கு அவர்களின் பாடசாலையிலேயே காய்ச்சலுக்கான தடுப்பூசி அளிக்கப்படுகிறது.
ஸ்கார்லெட் காய்ச்சலை பொறுத்தமட்டில் தீவிரமான காய்ச்சல் இருக்கும் எனவும், தொண்டை வலி அல்லது புண், கழுத்து வீங்கிய நிலை, 12 முதல் 48 மணி நேரத்திற்கு பின்னர் உடலில் வேனற்கட்டி காணப்படும் எனவும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.