ரஷ்யாவிலிருந்து இறக்குமதிக்கு தடை! பிரித்தானியா அதிரடி நடவடிக்கை
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து கேவியர் மற்றும் பிற உயர்தர பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பிரித்தானிய தடை விதித்துள்ளது.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து வைரம் மற்றும் ரப்பர் இறக்குமதிக்கான வரி 35 வீதம் அதிகரிக்கப்படும் அதே வேளையில் வெள்ளி மற்றும் மரப் பொருட்களுக்கு இறக்குமதி தடை நீட்டிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் சர்வதேச வர்த்தக திணைக்களத்தால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக செயலாளரான அன்னே-மேரி ட்ரெவெல்யன் கருத்து வெளியிடுகையில்,
"ரஷ்ய பொருளாதாரத்தை தனிமைப்படுத்துவதற்கான அழுத்தத்தைத் தூண்டுவதற்கு எங்களால் முடிந்த எல்லா வாய்ப்பையும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.
மேலும் இந்த நடவடிக்கைகள் திருகுகளை இறுக்கும், (விளாடிமிர்) புடினுக்கான நிதியுதவிக்கான இலாபகரமான வழிகளை மூடும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.