180 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Plane Crash Flight World
By Sajithra May 26, 2026 11:14 AM GMT
Report

எகிப்தின் ஹுர்காடா நகரில் இருந்து லண்டன் லூட்டன் நோக்கி 180 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று, கடந்த மே 19ஆம் திகதி அவசரமாக ரோம் நகருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

விமானத்தின் சரக்குப்பகுதியில் (Hold luggage) வைக்கப்பட்டிருந்த பையில் இருந்த கையடக்க தொலைபேசிக்கு பவர் பேங்க் (Power bank) இணைத்திருப்பதாக பயணி ஒருவர் ஊழியர்களிடம் தெரிவித்ததே இந்த அவசர நிலைக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 

விமானம் புறப்பட்டு சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் இந்தச் சம்பவம் குறித்து விமானிக்கு எச்சரிக்கப்பட்டதை அடுத்து, அடுத்த 20 நிமிடங்களுக்குள் ரோம் நகரின் பியுமிசினோ (Fiumicino) விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரகால தரையிறக்கத்தைத் தொடர்ந்து பயணிகளுக்கு ஒரே இரவில் தங்குவதற்கான வசதிகளை விமான நிறுவனம் வழங்கியதுடன், அடுத்த நாள் மதியம் 2 மணியளவில் லூட்டன் நகருக்கான மாற்று விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

30 வருட வானொலிப் பயணத்தின் உன்னதப் பகிர்வு: ஐபிசி தமிழின் மாபெரும் இரத்ததான முகாம்

30 வருட வானொலிப் பயணத்தின் உன்னதப் பகிர்வு: ஐபிசி தமிழின் மாபெரும் இரத்ததான முகாம்

அபாயநிலை.. 

போர்ட்டபிள் சார்ஜர்கள் (பவர் பேங்க்கள்) அதிக வெப்பமடைந்தாலோ அல்லது ஷார்ட் சர்க்யூட் (Short-circuit) ஏற்பட்டாலோ தீ விபத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான விதிகளை விதித்துள்ளன.

180 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Uk Aviation Warns Over Power Banks On Flights

ஈஸிஜெட் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்க்களை கைச் சாமான்களில் (Hand luggage) மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்பதுடன், அவற்றை பிரதான சரக்குப்பகுதியில் வைப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சாதனங்களின் திறன் 160 வாட்-அவர்ஸை (160Wh) அதிகமாக இருக்கக் கூடாது என்பதுடன், விமானப் பயணத்தின் போது மற்ற சாதனங்களை மின்னேற்ற இவற்றை பயன்படுத்துவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஏர் சீனா (Air China) A321 ஏர்பஸ் விமானத்தில் பவர் பேங்க் ஒன்று அதிக வெப்பமடைந்து தீப்பிடித்த சம்பவம் பதிவாகியிருந்தது, எனினும் ஊழியர்கள் உடனடியாக அத்தீயை அணைத்திருந்தனர்.

இத்தகைய பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, பொதுவாக விமானத்தில் பயணிப்பவர்கள் இவ்விடயம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. 

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! உயர்வடைந்துள்ள ரூபாவின் பெறுமதி

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! உயர்வடைந்துள்ள ரூபாவின் பெறுமதி

இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை - மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு

இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை - மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US