30 வருட வானொலிப் பயணத்தின் உன்னதப் பகிர்வு: ஐபிசி தமிழின் மாபெரும் இரத்ததான முகாம்
ஐபிசி தமிழ் (IBC Tamil) வானொலியின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக நலன் கருதிய மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்" எனும் மனிதாபிமான மகுட வாசகத்துடன் இந்த இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி, திங்கட்கிழமை (08.06.2026) காலை 9.00 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஐபிசி தமிழ் காரியாலயத்தில் (இல. 10A, Jaffna-Point Pedro Road) இந்த முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, "உங்கள் ஒரு துளி இரத்தம், ஒருவரின் முழு வாழ்க்கையைக் காப்பாற்றும்" என்ற உன்னத நோக்கில் குருதிக்கொடை வழங்க விரும்பும் அனைவரையும் இந்த முகாமில் கலந்துகொண்டு உயிர் காக்கும் இப்பணியில் பங்காளராகுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 2 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam