துணை முதல்வராக பதவியேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய மாற்றத்திற்கு அமைய செந்தில் பாலாஜி, நாசர் போன்றோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாளைய தினம் பதவியேற்பு
அதன்படி, உதயநிதி ஸ்டாலினும், ஏனைய அமைச்சர்களும் நாளைய தினம் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டால், திராவிட முன்னேற்றக்கழகத்துக்குள் பிரச்சினைகள் தோன்றலாம் என்று கூறப்பட்டது.
தொடர்ந்தும் திராவிட முன்னேற்றக்கழகம் பரம்பரைக்கட்சியாக மாறிவிடும் என்று விமர்சனம் வெளியிடப்பட்டது. எனினும், இறுதியில் கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கேற்ப அந்த பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |