எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறு போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோல் 27 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளது. டீசல் 24 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் காணப்படுவதனை நாம் ஒப்புக்கொள்கிறோம்.
தற்போதைய அரசாங்கம் மக்களிடம் எந்தவொரு விடயத்தையும் மூடி மறைப்பதில்லை.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகினால் அதனை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri
