பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளராக உதயகுமார் யுகதீஸ் ஏகமனதாக தெரிவு
பருத்தித்துறை(Point Pedro) பிரதேச சபையின் புதிய தவிசாளராக உதயகுமார் யுகதீஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 9 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 4 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்திக்கு 4 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழுவிற்கு 2 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு 1 உறுப்பினருமாக மொத்தம் 20 உறுப்பினர்கள் கொண்ட சபையில் இன்று காலையில் 11:30 மணியளவில் ஏகமனதாக தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் தவிசாளர்
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலமையில் தெரிவு இடம்பெற்றது.
தொடர்பு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.
உப தவிசாளராக கனகரத்தினம் சிறிகாந்த் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தநிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பேச்சாளர் ஐ.ரங்கேஸ்வரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.













6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
