வெளிநாட்டில் சிக்கிய ஆறு இலங்கையர்கள்! அச்சத்தில் CID க்கு விரைந்த இலங்கையின் முன்னாள் அமைச்சர்!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டதாக கூறப்படும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் செய்திகளாக பரப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிவித்துறு எல உறுமிய கட்சியின் பிரசார செயலாளர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விசாரணை
மேலும் கருத்து தெரிவித்த அவர்,''குறித்த பதிவுகள் முன்னாள் அமைச்சர் உதய கம்மம்பிலவின் பெயரில் உண்மைக்கு புறம்பாக வடிவமைக்கப்பட்டு, பிரபல சிங்கள ஊடகத்தின் சின்னத்தில் இந்த செய்திகள் வெளியிடப்பட்டு பரவலாக பரப்பப்பட்டுள்ளது.
இந்த செய்திகள் முன்னாள் அமைச்சரின் சுயமரியாதைக்கு தீங்கை ஏற்படுத்துவதுடன் அவரின் இறைமைக்கும் பங்கம் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டமிட்டப்பட்ட செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தலாம்.
இதற்கு பின் இயங்கும் குழு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கோருகிறோம்.''என தெரிவித்துள்ளார்.





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri
