பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு கொந்தளிக்கும் சிங்கள அரசியல்வாதி
இராணுவ வீரர்களை போர்க் குற்றவாளிகளாகக் கண்டறிய பிரித்தானியா நடத்திய விசாரணை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
சவேந்திர சில்வா, வசந்த கரன்னா கொட, ஜகத் ஜெயசூர்ய உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த பிரித்தானியாவிடம் நாங்கள் 3 கேள்விகளை கேட்கிறோம்.
குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பு, நமது இராணுவ வீரர்களுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான சுதந்திரமாக கருத்து வெளியிட வாய்ப்பு வழங்கப்பட்டதா? உலகளாவிய ரீதியிலுள்ள பயங்கரவாத தலைவர்களுக்கு பிரித்தானியா ஒரு புகலிடமாக மாறியுள்ளது.
பிரித்தானியா
எனினும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்கள் எவ்வாறு குற்றவாளிகளாக மாறினர் என்பதை பிரித்தானியா உலகிற்கு விளக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
