சிறையில் தனிமையில் வாடும் தேசபந்து தென்னகோன்
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன், தற்போது தும்பர சிறைச்சாலையின் கே பிரிவின் மேல் தளத்தில் தனி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரது பாதுகாப்புக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள K பிரிவில் உள்ள மேல்மாடி அறைகளில் வேறு எந்த கைதிகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
உயர்மட்ட கைதி
தேசபந்து மற்ற உயர்மட்ட கைதிகளை போன்று எந்த பிரச்சினையும் ஏற்படுத்துவதில்லை என்பதே தும்பர சிறைச்சாலையில் உள்ள சிறை அதிகாரிகளிடையே அதிகம் பேசப்படும் பிரச்சினையாகியுள்ளது.
கடந்த 5 நாட்களாக அவர் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறையிலிருந்து அவர் விடுத்த இரண்டாவது வேண்டுகோளிற்கமைய, சிறை நூலகத்தைப் பயன்படுத்த அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமைத்த உணவு
இதுவரை சிறையில் கழித்த 5 நாட்களில் அவர் 5 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நேற்றும் நேற்று முன்தினம் சிறைச்சாலைக்கு சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே வீட்டில் சமைத்த உணவினை தனக்கு வழங்க அனுமதிக்குமாறு தேசபந்து தென்னக்கோன் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
