பிள்ளையான் கைதில் புதிய குழப்பம் - சுரேஷ் சாலேவிடம் சிக்கிய புத்தகம்
உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிள்ளையான் மற்றும் சுரேஸ் சலே ஆகியார் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார் என்று தலைப்பில் உதயகம்மன்பிலவினால் புத்தகமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் நேற்றுமுனதினம்(2) நீதவான் முன்னிலையில் முன்லைப்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து பிள்ளையான் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதயகம்மன்பில உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானை கைது செய்ய ஜனாதிபதி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்துக்கள் பொய்யென்று குறிப்பிட்டுள்ளார்.
தனது புத்தகத்தில் பிழையான பதிவொன்று வெளியாகியுள்ளது, அதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை, அதற்கும் சுரேஸ் சலேவிற்கும் சம்மந்தம் உள்ளது என்று உதயகம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் CID யினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..