இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான உதய கம்மன்பில
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (09) காலை முன்னிலையாகியுள்ளார்.
எந்தவித சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட சுங்கத்தினால் 323 கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
மேலும், முதல் முறையாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேர் வழியில் கொண்டு செல்லவே நாங்கள் விமர்சனம் செய்தோம். ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திசாநாயக்கவின் தவறான நடகத்தை நிறுத்துவதே எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam