அநுரவின் உள்நாட்டு பயணச் செலவுகள் குறித்து வெளியான தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டுப் பயணச் செலவுகள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து தேடி வரும் ஒரு யூடியூபர், ஜனாதிபதி செயலகத்தின் நியமிக்கப்பட்ட அதிகாரி தனது தகவலை நிராகரித்ததை தொடர்ந்து தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் உள்நாட்டுப் பயணம் மற்றும் தங்குமிடத்திற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செய்த செலவுகள் குறித்த தகவல்களையே அவர் கோருயிருந்தார்.
தகவலுக்கான கோரிக்கை நிராகரிப்பு
ஜினாத் பிரேமரத்ன என்ற யூடியூபர், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் எண் தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ் நேற்று இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார்.
மேற்கண்ட முடிவை மறுபரிசீலனை செய்து கோரப்பட்ட தகவலை வெளியிட அல்லது வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமகனின் அறியும் உரிமையின் கொள்கைகளுக்கு ஏற்ப பொருத்தமான வழிகாட்டுதலை வழங்க தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
செப்டம்பர் 17 அன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு யூடியூபர் செய்த தகவலுக்கான கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணத்தையும் முந்தைய முடிவையும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரி உறுதி செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
