இந்தியா செல்வதை தவிர்க்கும் ரணில்! தடுமாறும் மோடி - அமித்ஷா(Video)
இந்தியாவிற்கு செல்வதை ரணில் தவிர்க்க முற்படுகின்றார் என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,இந்தியாவை கடந்து அமெரிக்கா சீனாவுடன் இறுதியாக பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம், விருப்பம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது.
ரணில் மாத்திரமன்றி கோட்டாபய, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான அணுகுமுறைகளே பின்பற்றப்பற்று வந்தன.
இருப்பினும் இந்தியாவிற்கு சில உறுதி மொழிகளை வழங்குவதுடன் சில பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்கின்ற நுட்பமான அணுகுமுறைகளை செய்துகொண்டு சீனா மற்றும் அமெரிக்காவுடன் நேரடியாக பயணிக்கும் உத்திகளை ரணில் விக்ரமசிங்க மிக நுட்பமாக செய்கின்றார்.
இதனடிப்படையிலேயே நல்லாட்சி காலத்தில் ரணில் ஹம்பாந்தோட்டயை இந்தியாவிற்கு கொடுக்காமல் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுத்தார்.
இந்நிலையில் ரணிலை கையாளும் விடயத்தில் இந்தியாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன் மிக அவதானமாக ரணிலை கையாளுகின்றார்கள்.
மேலும் ரணிலுடன் அரசியல் அணுகுமுறைகளை கையாளுவது இந்தியாவிற்கு இலகுவான விடயமல்ல.”என தெரிவித்துள்ளார்.