வடக்கு-கிழக்கை பிரிக்க இரகசிய நகர்வு! அச்சத்தில் இந்தியா(Video)
இலங்கை முழுவதிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்திய காலம் முடிந்துவிட்டது. இப்போது வடக்கு கிழக்கை தமது கைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“சீனாவை இலங்கை புறக்கணிக்க முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டது. அதனால் தான் சீனா தொடர்பான இரண்டு விடயங்களை செய்துவிட்டு ஜனாதிபதி இந்தியா செல்கின்றார்.
சீனாவை முற்று முழுதாக இலங்கையிலிருந்து அகற்ற முடியாது என இந்தியாவிற்கும் தெரியும்.
எமது நடவடிக்கை எதுவும் மூன்றாம் தரப்பிற்கு எதிரானது இல்லை என சீனாவும் கூறியுள்ளது.
இலங்கையில் இருந்து இந்தியா எதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஓர் பதற்றமான நிலையிலே உள்ளது.”என கூறியுள்ளார்.