ரஷ்யாவின் உக்கிர தாக்குதல்! உக்ரைனில் இருந்து தலை தெறிக்க ஓடிய பிரித்தானிய சிறப்பு படையணி
ரஷ்யாவின் உக்கிர தாக்குதலில் பிரித்தானியாவின் சிறப்பு படையணியை சேர்ந்தவர்கள் உக்ரைனில் இருந்து தலைதெறிக்க ஓடியதாக பிரித்தானியாவின் வேல்ஸில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ரஷ்யாவின் பொருளாதாரத்தையும், படை பலத்தையும் அழிக்கும் நோக்கில் தான் பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் முற்று முழுதாக உக்ரைன் பக்கம் நிற்கிறார்கள்.
கடந்த 13ஆம் திகதி போலந்து எல்லையிலிருந்து 11 மைல் தொலைவில் ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
அந்த தாக்குதல் நடந்த சமயம் அங்கிருந்து தப்பி வந்தவர்கள் இப்போது கூறுகிறார்கள், தாக்குதல் நடந்த சமயம் அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறிய நிலையில் அதில் கனேடியர்கள், அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள் என பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அதிலும் குறிப்பாக உக்ரைனுக்கு ஆதரவாக போரிட சென்றவர்கள் தான் என.
அந்த தாக்குதலில் இறந்தவர்களில் மூவர் பிரித்தானியாவின் பரா துருப்புக்கள். அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் ஏறத்தாழ 200 பேர் வரையில் இறந்தவர்கள். அதில் 100 பேர் வரையில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
ரஷ்யாவின் உக்கிர தாக்குதலில் பிரித்தானியாவின் சிறப்பு படையணியை சேர்ந்தவர்கள் உக்ரைனில் இருந்து தலைதெறிக்க ஓடினார்கள். அதில் தப்பிய ஒருவர் நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.
சனிக்கிழமை மிகப்பெரிய விருந்துபசாரம் நடைபெற்றதாம், அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நீண்ட நேரம் உறங்குவார்கள். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
30 ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. தாம் கூடாரமொன்றுக்குள் இருந்த நிலையில் கட்டிடங்களிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதால் நாங்கள் உயிர் தப்பினோம் என்று குறித்த நபர் நேர்காணலில் தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.